அனைத்து விளையாட்டு தொடர்களும் இரத்து – சீன மகளிர் டென்னிஸ் கழகம்

அனைத்து விளையாட்டு தொடர்களும் இரத்து – சீன மகளிர் டென்னிஸ் கழகம்

அனைத்து விளையாட்டு தொடர்களும் இரத்து – சீன மகளிர் டென்னிஸ் கழகம்

எழுத்தாளர் Staff Writer

02 Dec, 2021 | 7:09 am

Colombo (News 1st) சீனாவில் இடம்பெறும் அனைத்து விளையாட்டுத் தொடர்களும் உடனடியாக இரத்து செய்யப்படுவதாக அந்நாட்டு மகளிர் டென்னிஸ் கழகம் அறிவித்துள்ளது.

சீன டென்னிஸ் வீராங்கனை பெங் சுவாய் (Peng Shuai) காணாமல்போன விவகாரத்தை தொடர்ந்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

உயர்மட்ட அதிகாரியொருவர் மீது பாலியல் குற்றச்சாட்டை சுமத்திய டென்னிஸ் வீராங்கனை பெங் ச்சுவாய், கடந்த 03 வாரங்களாக பொதுவௌியில் தோன்றாத நிலையில் காணாமல் போயுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்த விவகாரம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள சூழலில் தமது வீராங்கனைகளை போட்டிகளில் பங்கேற்குமாறு எவ்வாறு தம்மால் அழைப்பு விடுக்க முடியும் என சீன மகளிர் டென்னிஸ் கழகத்தின் தலைவர் Steve Simon தெரிவித்துள்ளார்.

கடந்த மாதத்தில் இடம்பெற்ற சர்வதேச ஒலிம்பிக் குழுவின் தலைவர் தோமஸ் பாக்குடனான காணொலி அழைப்பில் தாம் பாதுகாப்பாகவும் நலத்துடனும் இருப்பதாக Peng Shuai தெரிவித்திருந்ததாக அவர் குறிப்பிடடுள்ளார்.

இந்த காணொளி பெங்கின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான போதிய ஆதாரம் என அவர் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும், Peng Shuai காணாமல்போனமை தொடர்பில் முழுமையான விசாரணைகளை முன்னெடுக்குமாறு கழகத்தினால் தொடர்ச்சியாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகின்றது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்