வெலிகம வீட்டில் தீ; 8 வயது சிறுமி உயிரிழப்பு

by Staff Writer 01-12-2021 | 6:55 AM
Colombo (News 1st) மாத்தறை - வெலிகம பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்றிரவு (30) தீ பரவியுள்ளது. தீ விபத்தில் சிக்கி வீட்டிலிருந்த 08 வயதான சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக நியூஸ்பெஸ்ட்டின் பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். வீட்டில் தீ பரவிய சந்தர்ப்பத்தில் வீட்டில் தந்தை, தாய் இரண்டு சிறுமிகள் மற்றும் பாட்டி ஆகியோர் இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து, அயலவர்களால் ஏனையோர் வீட்டிலிருந்து வௌியேற்றப்பட்ட போதிலும், குறித்த 8 வயது சிறுமியை மீட்க முடியாமற்போயுள்ளது. சம்பவம் தொடர்பில் வெலிகம பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.