நவம்பர் மாதத்தில் நாட்டின் பணவீக்கம் அதிகரிப்பு

நவம்பர் மாதத்தில் நாட்டின் பணவீக்கம் அதிகரிப்பு

by Staff Writer 01-12-2021 | 10:08 PM
Colombo (News 1st) வரலாறு காணாதவாறு பணம் அச்சிடப்பட்டதன் காரணமாக கடந்த நவம்பர் மாதம் நாட்டின் பணவீக்கம் 9.9 ஆக அதிகரித்துள்ளது. கடந்த ஒக்டோபர் மாதம் நாட்டின் பணவீக்கம் 7.6 ஆக காணப்பட்டது. கொழும்பு நுகர்வோர் சுட்டெண் தரவுகளுக்கு அமைய, நவம்பர் மாதம் உணவு வகைகளின் விலை 5.3 வீதத்தால் அதிகரித்துள்ளது. அரிசி மற்றும் மரக்கறி வகைகளின் விலைகள் அதிகரித்தமையே இதற்கு காரணமாகும். 2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தின் பின்னர் பதிவான மிகவும் அதிக பணவீக்கம் இதுவாகும்.