by Bella Dalima 01-12-2021 | 4:50 PM
முன்னணி தமிழ் நடிகர் அஜித் குமார் தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அவர் தற்போது வலிமை படத்தில் நடித்துள்ளார். இப்படம் அடுத்த ஆண்டு வெளியாகவுள்ளது.
இவரை ரசிகர்கள், சினிமா பிரபலங்கள் பலரும் 'தல அஜித்' என்று அழைத்து வருகிறார்கள்.
இந்நிலையில், அஜித் தனது மேலாளர் சுரேஷ் சந்திரா மூலம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது,
பெரும் மரியாதைக்குரிய ஊடக, பொதுஜன மற்றும் என் உண்மையான ரசிகர்களுக்கு,
இனி வரும் காலங்களில் என்னை பற்றி எழுதும் போதோ, என்னை பற்றி குறிப்பிட்டு பேசும் போதோ என் இயற்பெயரான அஜித் குமார், மற்றும் அஜித் என்றோ அல்லது AK என்றோ குறிப்பிட்டால் போதுமானது.
'தல' என்றோ வேறு ஏதாவது பட்டப்பெயர்களையோ குறிப்பிட்டு அழைக்க வேண்டாம் என்று அன்போடு வேண்டுகோள் விடுக்கிறேன்.
உங்கள் அனைவரின் ஆரோக்கியம், உள்ள உவகை, வெற்றி, மன அமைதி, மன நிறைவு உள்ளிட்ட சகலமும் கிடைக்க வாழ்த்துகிறேன்.
அன்புடன்,
அஜித் குமார்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.