தனங்கிளப்பில் சடலமாக மீட்கப்பட்டவர் பிரதேச சபை உறுப்பினர் என தெரியவந்துள்ளது

தனங்கிளப்பில் சடலமாக மீட்கப்பட்டவர் பிரதேச சபை உறுப்பினர் என தெரியவந்துள்ளது

தனங்கிளப்பில் சடலமாக மீட்கப்பட்டவர் பிரதேச சபை உறுப்பினர் என தெரியவந்துள்ளது

எழுத்தாளர் Staff Writer

01 Dec, 2021 | 3:11 pm

Colombo (News 1st) யாழ். தென்மராட்சி – தனங்கிளப்பு பகுதியிலுள்ள வீடொன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டவர் பிரதேச சபை உறுப்பினர் ஒருவரென தெரியவந்துள்ளது.

வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் உறுப்பினரான சுப்ரமணியம் சிவபாலன் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சட்ட மருத்துவ அதிகாரி மற்றும் திடீர் மரண விசாரணை அதிகாரி ஆகியோரின் விசாரணைகளின் பின்னர் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

கிராம சேவை உத்தியோகத்தரால் வழங்கப்பட்ட தகவலை அடுத்து, இன்று காலை சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபர், உயிரிழந்து பல நாட்கள் கடந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இவர் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளமை தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்