குண்டசாலை வீட்டில் எரிவாயு வெடித்ததில் பெண் படுகாயம்

by Staff Writer 01-12-2021 | 11:35 AM
Colombo (News 1st) கண்டி - குண்டசாலை, நத்தரம்பொத்த பிரதேசத்திலுள்ள வீடொன்றில் இன்று (01) அதிகாலை 3 மணியளவில் எரிவாயு வெடித்ததில் பெண்ணொருவர் பலத்த காயமடைந்துள்ளார். காயங்களுக்குள்ளான பெண் தற்போது கண்டி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாக நியூஸ்பெஸ்ட்  செய்தியாளர் தெரிவித்தார். சம்பவம் தொடர்பில் பல்லேகல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.