இன்று (01) முதல் புதிய சுகாதார வழிகாட்டல்கள் அமுல்

இன்று (01) முதல் புதிய சுகாதார வழிகாட்டல்கள் அமுல்

இன்று (01) முதல் புதிய சுகாதார வழிகாட்டல்கள் அமுல்

எழுத்தாளர் Staff Writer

01 Dec, 2021 | 8:16 am

Colombo (News 1st) இன்று (01) முதல் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய சுகாதார வழிகாட்டல்கள் வௌியிடப்பட்டுள்ளன.

அதற்கிணங்க,

⭕ திருமண நிகழ்வுகளில் பங்குபற்றுவோரின் அதிகபட்ச எண்ணிக்கை 200 ஆக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

⭕ திறந்தவௌி கொண்டாட்டங்களில் 250 பேர் வரையில் கலந்துகொள்வதற்கு அனுமதி

⭕ திருமண நிகழ்வுகளில் மதுபானத்துடனான விருந்துபசாரங்களுக்கு தொடர்ந்தும் தடை

⭕ திரையரங்குகளில் ஒரு தடவையில் 75 வீதமானோருக்கு அனுமதி

⭕ மரண சடங்குகளில் 20 பேர் மாத்திரமே கலந்து கொள்ள அனுமதி

⭕ வழிபாட்டுத்தலங்களில் இடம்பெறும் நிகழ்வுகள் சுகாதார அமைச்சினால் வௌியிடப்பட்டுள்ள வழிகாட்டல்களுக்கு அமைய முன்னெடுக்கப்பட வேண்டும்

⭕ வர்த்தக நிலையங்கள், மருந்தகங்கள், பல்பொருள் அங்காடிகளில் ஒரே தடவையில் மூன்றில் ஒருவீதமானோருக்கே அனுமதி. அத்துடன், அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை காட்சிப்படுத்தப்பட வேண்டும் என அறிவுறுத்தல்

உள்ளிட்ட புதிய வழிகாட்டல் கோவை வௌியிடப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்