அமெரிக்க பாடசாலையில் துப்பாக்கிச் சூடு; 03 மாணவர்கள் உயிரிழப்பு

அமெரிக்க பாடசாலையில் துப்பாக்கிச் சூடு; 03 மாணவர்கள் உயிரிழப்பு

அமெரிக்க பாடசாலையில் துப்பாக்கிச் சூடு; 03 மாணவர்கள் உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

01 Dec, 2021 | 6:37 am

Colombo (News 1st) அமெரிக்காவின் மிச்சிக்கன் (Michigan) மாநிலத்திலுள்ள பாடசாலை ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் மாணவர்கள் மூவர் உயிரிழந்துள்ளனர்.

ஆசிரியர் ஒருவர் உட்பட 8 பேர் காயமடைந்துள்ளனர்.

15 வயதான சந்தேகநபர் கைத்துப்பாக்கியைப் பயன்படுத்தி 15 தொடக்கம் 20 தடவைகள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இரண்டாம் வருட மாணவன் ஒருவரே இந்தத் துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பொலிஸாரால் அழைப்பு விடுக்கப்பட்டு ஐந்து நிமிடங்களின் பின்னர் அவர் சரணடைந்ததாக அதிகாரிகள் குறிப்பிட்டனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்