Omicron பிறழ்வு தொடர்பில் அச்சமடைய தேவையில்லை – அமெரிக்க ஜனாதிபதி

Omicron பிறழ்வு தொடர்பில் அச்சமடைய தேவையில்லை – அமெரிக்க ஜனாதிபதி

Omicron பிறழ்வு தொடர்பில் அச்சமடைய தேவையில்லை – அமெரிக்க ஜனாதிபதி

எழுத்தாளர் Staff Writer

30 Nov, 2021 | 7:34 am

Colombo (News 1st) Omicron கொவிட் பிறழ்வு தொடர்பில் அச்சமடையத் தேவையில்லை என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவுறுத்தியுள்ளார்.

எவ்வாறாயினும், எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

புதிய கொரோனா பிறழ்வு உலக நாடுகளில் வேகமாக பரவி வருகின்ற நிலையில், இது குறித்து வௌ்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தியுள்ளார்.

இவ்வாறான சூழ்நிலையில் பூஸ்டர் தடுப்பூசி பெற்றுக் கொள்வது அவசியம் எனவும் முகக்கவசம் அணிவது கட்டயாமெனவும் ஜனாதிபதி ஜோ பைடன் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

ஏற்கனவே ஆபிரிக்காவின் 8 நாடுகளுக்கான பயணத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் கட்டுப்பாடுகள் அல்லது முடக்கல் நிலை தேவையற்றது என அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

Omicron பிறழ்வு கண்டறியப்பட்டதை அடுத்து, தென்னாபிரிக்கா, Botswana, Zimbabwe, Namibia, Lesotho, Eswatini, Mozambique மற்றும் Malawi நாடுகளிலிருந்து வருகை தரும் விமானங்களுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்