by Staff Writer 30-11-2021 | 11:55 AM
Colombo (News 1st) பிரபல கால்பந்தாட்ட வீரரான ஆர்ஜென்டினாவின் லயனல் மெஸ்ஸி (Lionel Messi) 7 ஆவது தடவையாகவும் “ Ballon d’Or விருதை வென்றுள்ளார்.
“Ballon d’Or 2021 விருது வழங்கும் விழா நேற்று (29) இடம்பெற்றது.
கொரோனா வைரஸ் நிலைமையால் 2020 ஆம் ஆண்டு Ballon d’Or விருது வழங்கும் விழா இரத்து செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
2019 ஆம் ஆண்டிலும் லயனல் மெஸ்ஸி Ballon d’Or விருதைப் பெற்றிருந்தார்.
தனது 20 ஆண்டு கால காற்பந்தாட்ட வாழ்க்கையில் பார்சிலோனாவுக்காக மாத்திரமே விளையாடிய மெஸ்ஸி, தற்போது பரிஸ் சென்ட் - ஜெர்மெய்ன் அணிக்காக விளையாடி வருகின்றார்.
34 வயதான மெஸ்ஸி, 2009, 2010, 2011, 2012, 2015 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் பலோன் டி’ஓர் விருதை சுவீகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.