வெருகல் பிரதேச சபை வரவு செலவு திட்டம் தோற்கடிப்பு

வெருகல் பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் தோற்கடிப்பு

by Staff Writer 30-11-2021 | 7:18 AM
Colombo (News 1st) திருகோணமலை - வெருகல் பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மேலதிக ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தவிசாளர் க. சுந்தரலிங்கத்தினால் நேற்று (29)  சபையில் சமர்ப்பிக்கப்பட்டது. மொத்த உறுப்பினர்கள் 13 பேரில் 06 உறுப்பினர்கள் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாகவும் 07 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்தனர். இதற்கமைய, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வசமிருந்த வெருகல் பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, குறித்த வரவு செலவுத் திட்டம் தொடர்பில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.