மஹிந்த சமரசிங்கவிற்கு பதில் மஞ்சு லலித் வர்ண குமார

மஹிந்த சமரசிங்கவிற்கு பதிலாக மஞ்சு லலித் வர்ண குமார பாராளுமன்றத்திற்கு தெரிவு 

by Bella Dalima 30-11-2021 | 6:52 PM
Colombo (News 1st) மஹிந்த சமரசிங்க இராஜினா செய்தமையால் ஏற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு மஞ்சு லலித் வர்ண குமார தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதற்கான அதிவிசேட வர்த்தமானியை வௌியிட இன்று (30) கூடிய தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்ததாக ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா குறிப்பிட்டார். அமெரிக்க தூதுவராக கடமைகளை பொறுப்பேற்கவுள்ளதால், பாராளுமன்ற உறுப்பினர் பதவியை மஹிந்த சமரசிங்க அண்மையில் இராஜினாமா செய்தார்.