விசேட தேவையுடையோருக்கான சிறந்த பாடசாலைகளில் ஒன்றாக கோண்டாவில் சிவபூமி மனவிருத்தி பாடசாலை தெரிவு

விசேட தேவையுடையோருக்கான சிறந்த பாடசாலைகளில் ஒன்றாக கோண்டாவில் சிவபூமி மனவிருத்தி பாடசாலை தெரிவு

விசேட தேவையுடையோருக்கான சிறந்த பாடசாலைகளில் ஒன்றாக கோண்டாவில் சிவபூமி மனவிருத்தி பாடசாலை தெரிவு

எழுத்தாளர் Staff Writer

30 Nov, 2021 | 1:20 pm

Colombo (News 1st) விசேட தேவையுடையோருக்கான சிறந்த பாடசாலைகளில் ஒன்றாக தெரிவு செய்யப்பட்ட யாழ். கோண்டாவில் சிவபூமி மனவிருத்தி பாடசாலை சமூகத்தை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று (29) நடைபெற்றது.

தேசிய மட்டத்தில் விசேட தேவையுடையோருக்கான சிறந்த பாடசாலை விருதை யாழ். கோண்டாவில் சிவபூமி சிறுவர் மனவிருத்தி பாடசாலை சுவீகரித்திருந்ததுடன், கடந்த 27 ஆம் திகதி விருதும் வழங்கப்பட்டிருந்தது.

இதனை முன்னிட்டு பாடசாலை சமூகத்தை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றது.

இந்த நிகழ்வில் சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் செஞ்சொற்செல்வர் கலாநிதி திரு. ஆறுதிருமுருகன், பாடசாலையின் அதிபர், நல்லூர் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் பாடசாலை சமூகத்தினர் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்