English
සිංහල
எழுத்தாளர் Bella Dalima
30 Nov, 2021 | 3:04 pm
Colombo (News 1st) யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறை நகரசபையின் 2022 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் இன்று இரண்டாவது தடவையாக தோற்கடிக்கப்பட்டுள்ளது.
வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 8 உறுப்பினர்களும் எதிராக 9 உறுப்பினர்களும் வாக்களித்தனர்.
அதற்கமைய, ஒரு மேலதிக வாக்கினால் வல்வெட்டித்துறை நகரசபையின் 2022 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
சுயேட்சை குழுவினால் முதலாவது தடவையாக பிரேரிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று மீண்டும் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.
இரண்டாவது தடவையும் வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டமையால், வல்வெட்டித்துறை நகரசபையின் தலைவர் ச.செல்வேந்திரா பதவி விலக்கப்படுவதுடன், புதிய தவிசாளரைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு திகதி இரண்டு வாரங்களுக்குள் அறிவிக்கப்படவுள்ளது.
06 Jan, 2022 | 02:54 PM
28 Dec, 2021 | 07:38 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS