மேல் மாகாணத்தில் 80,000 ஏக்கர் தரிசு நிலங்கள்

மேல் மாகாணத்தில் 80,000 ஏக்கர் தரிசு நிலங்கள்

மேல் மாகாணத்தில் 80,000 ஏக்கர் தரிசு நிலங்கள்

எழுத்தாளர் Staff Writer

30 Nov, 2021 | 10:20 am

Colombo (News 1st) மேல் மாகாணத்தில் சுமார் 80,000 ஏக்கர் தரிசு நிலங்கள் உள்ளதாக கமநல சேவைகள் ஆணையாளர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது நாட்டின் ஏனைய பகுதிகளிலுள்ள தரிசு நிலங்களில் 50 வீதமானதாக காணப்படுவதாக அதன் பணிப்பாளர் நாயகம் A.H.M.L. அபேரத்ன தெரிவித்தார்.

சுமார் 27,000 ஏக்கர் தரிசு நிலத்தில் சிறுபோக மற்றும் பெரும்போக செய்கை மீள முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஆளனிப் பற்றாக்குறை மற்றும் பயிர்ச்செய்கை கைவிடப்பட்டமையால், காணிகள் தரிசு நிலங்களாகியுள்ளதாக கமநல சேவைகள் ஆணையாளர் நாயகம் A.H.M.L. அபேரத்ன தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்