மியன்மாரிலிருந்து அரிசி இறக்குமதி; அமைச்சரவை அனுமதி

மியன்மாரிலிருந்து அரிசி இறக்குமதி; அமைச்சரவை அனுமதி

எழுத்தாளர் Bella Dalima

30 Nov, 2021 | 2:53 pm

Colombo (News 1st) மியன்மாரிலிருந்து 20,000 மெட்ரிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அரிசியின் கையிருப்பை பற்றாக்குறையின்றி பேணும் நோக்குடன், அரிசியை இறக்குமதி செய்வதற்கு தீர்மானிக்கப்படுள்ளது.

இலங்கை வர்த்தக பல்நோக்கு கூட்டுத்தாபனத்தினூடாக மியன்மாரிலிருந்து அரிசி இறக்குமதி செய்யப்படவுள்ளது.

460 அமெரிக்க டொலருக்கு ஒரு மெட்ரிக் தொன் அரிசி இறக்குமதி செய்யப்படவுள்ளதாக அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்