பயாகல விற்பனை நிலையத்தில் தீ பரவல்

பயாகல விற்பனை நிலையத்தில் தீ பரவல்

by Staff Writer 30-11-2021 | 10:19 PM
Colombo (News 1st) பயாகல பகுதியிலுள்ள கட்டடப்பொருள் விற்பனை நிலையத்தில் இன்றிரவு பரவிய தீயினால் வர்த்தக நிலையம் முற்றாக சேதமடைந்துள்ளது. இன்றிரவு 7 மணியளவில் குறித்த வர்த்தக நிலையத்தில் தீ பரவியிருந்தது. இந்த வர்த்தக நிலையத்திற்கு அருகிலிருந்த எரிவாயு சிலிண்டர் விற்பனை நிலையத்திலும் தீ பரவாமல் இருக்க சிலிண்டர்களை உடனடியாக அங்கிருந்து அப்புறப்படுத்த நேரிட்டது. வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் சிறு காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தீ பரவியமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.