கடும் காற்றினால் கடலுக்கு சென்ற படகுகள் சேதம்; மீனவர்கள் மீட்பு 

by Staff Writer 30-11-2021 | 12:51 PM
Colombo (News 1st) யாழ்ப்பாணம் - மண்டைதீவு கடற்பகுதியில் நேற்று (29) வீசிய பலத்த காற்று காரணமாக கடலுக்கு சென்ற மீனவர்களின் இரு படகுகள் சேதமடைந்துள்ளன. யாழ். குருநகர் பகுதியிலிருந்து நேற்று (29) மதியம் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களின் இரு படகுகள் பலத்த காற்றினால் சேதமடைந்துள்ளன. குறித்த படகில் இருந்த நால்வரும் வேறு மீனவர்களின் உதவியுடன் காப்பாற்றப்பட்டதுடன் இரண்டு படகுகளும் சேதமடைந்த நிலையில் கரைக்கு கொண்டு வரப்பட்டன.