கடந்த 14 நாட்களுக்குள் நாட்டிற்கு வருகை தந்தவர்கள் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவர்: சுதர்சனி பெர்னாண்டோபுள்ளே

எழுத்தாளர் Bella Dalima

30 Nov, 2021 | 4:40 pm

Colombo (News 1st) புதிய கொரோனா வைரஸ் பிறழ்வான Omicron அடையாளம் காணப்பட்டுள்ள நாடுகளில் இருந்து கடந்த 14 நாட்களுக்குள் நாட்டிற்கு வருகை தந்தவர்கள் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவர் என இராஜாங்க அமைச்சர் சுதர்சனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்தார்.

சுகாதார அமைச்சுக்கான ஒதுக்கீடுகள் தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்ட போதே இராஜாங்க அமச்சர் இதனை குறிப்பிட்டார்.

COVID-19 தொற்றுக்கு எதிரான தடுப்பூசி ஏற்றல் செயற்பாட்டினூடாக, தொற்று பரவலை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருகின்ற நிலையில், Omicron வைரஸ் பிறழ்வானது தென்னாபிரிக்கா உள்ளிட்ட சில நாடுகளில் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

Omicron வைரஸ் பிறழ்வானது ஏற்கனவே தொற்றுக்குள்ளானோருக்கும் தொற்றக்கூடும் என அவர் தெரிவித்தார்.

இந்த வைரஸ் பிறழ்வு தொடர்பில் தொடர்ந்தும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதால், நாட்டிற்கு வருகை தரும் வௌிநாட்டவர்களுக்கான அனுமதி இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சுதர்சனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்தார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்