கஞ்சா ஏற்றுமதியை சட்டப்பூர்வமாக்க நடவடிக்கை

கஞ்சா ஏற்றுமதியை சட்டப்பூர்வமாக்க நடவடிக்கை

கஞ்சா ஏற்றுமதியை சட்டப்பூர்வமாக்க நடவடிக்கை

எழுத்தாளர் Bella Dalima

30 Nov, 2021 | 7:16 pm

Colombo (News 1st) கஞ்சா ஏற்றுமதியை விரைவில் சட்டப்பூர்வமாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சுதேச மருத்துவத்துறை இராஜாங்க அமைச்சர், சட்டத்தரணி சிசிர ஜயக்கொடி தெரிவித்தார்.

இன்றைய சபை அமர்வின் போதே அவர் இதனை கூறினார்.

எதிர்வரும் மாதத்திற்குள் கஞ்சா ஏற்றுமதிக்கு அனுமதி வழங்குவதற்கான சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.

மருத்துவத் தேவையை அடிப்படையாகக் கொண்டு கஞ்சா ஏற்றுமதியை வலுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் சுதேச மருத்துவத்துறை இராஜாங்க அமைச்சர், சட்டத்தரணி சிசிர ஜயக்கொடி சுட்டிக்காட்டினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்