2020 அரச தொலைக்காட்சி விருது: பல விருதுகளை சுவீகரித்த நியூஸ்பெஸ்ட், சக்தி TV

2020 அரச தொலைக்காட்சி விருது: பல விருதுகளை சுவீகரித்த நியூஸ்பெஸ்ட், சக்தி TV

எழுத்தாளர் Staff Writer

29 Nov, 2021 | 9:36 pm

Colombo (News 1st) 2020 அரச தொலைக்காட்சி விருது வழங்கல் விழாவில் நியூஸ்பெஸ்ட் மற்றும் சக்தி தொலைக்காட்சி இம் முறையும் பல விருதுகளைச் சுவீரகரித்தது.

அரச தொலைக்காட்சி விருது வழங்கல் விழா, பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

முதற்தர செய்தி வழங்குநரான நியூஸ்பெஸ்ட், கலாசாரம், விளையாட்டு, சிறந்த அறிக்கையிடல் உள்ளிட்ட சில விருதுகளை இன்று (29) சுவீகரித்தது.

2020 அரச தொலைக்காட்சி அரச விருது வழங்கல் விழாவில் சிறந்த கலாசார நிகழ்ச்சிக்கான விருதை “அண்ணன்மார் – தங்காள்” கதை தொகுப்பிற்காக நியூஸ்பெஸ்ட் முகாமையாளர் இராஜேந்திரன் கோகுல்நாத் பெற்றுக் கொண்டார்.

சிறந்த தொலைக்காட்சி விளையாட்டு நிகழ்ச்சிக்கான விருதை “SPORTS SAGA” நிகழ்ச்சிக்காக நியூஸ்பெஸ்ட்டின் இராஜலிங்கம் திருஷானோ பெற்றுக்கொண்டார்.

2020 ஆண்டுக்கான தொலைக்காட்சி அரச விருது வழங்கல் விழாவில் சிறந்த புலனாய்வுச் செய்தி அறிக்கையிடலுக்கான விருதை அந்த ஆண்டில் நியூஸ்பெஸ்ட்டின் ஊடாக ஔிபரப்பான செய்தி அறிக்கைக்காக ஊடகவியலாளர் இராசதுரை ஜெயரூபன் பெற்றார்.

சிறந்த தொலைக்காட்சி ஆவண நிகழ்ச்சிக்கான விருது சக்தி TV இல் ஔிபரப்பான பயணம் நிகழ்ச்சிக்காக சுதர்ஷன் கனகராஜாவிற்குக் கிட்டியது.

நியூஸ்பெஸ்ட் சார்பில் மனோஜ் ரத்நாயக்க இரண்டு விருதுகளைப் பெற்றார்.

சிங்கள மற்றும் ஆங்கில மொழி மூல சிறந்த இடைநிரப்பு நிகழ்ச்சிக்கான விருதுகளை மனோஜ் ரத்நாயக்க சுவீகரித்தார்.

சிறந்த சிங்கள மொழி மூல ஆவணப்படுத்தல் நிகழ்ச்சிக்கான ஜூரியின் விசேட விருது, சிரச TV இல் ஔிபரப்பான சஞ்சாரே வித் ரொஹான் ட்ரெக் நிகழ்ச்சிக்குக் கிட்டியது.

2020 ஆம் ஆண்டுக்கான தொலைக்காட்சி அரச விருது வழங்கல் விழாவில் சிறந்த நிகழ்ச்சித் தொகுப்பாளர் விருதுக்கு நியூஸ்பெஸ்ட் சக்தி FM முகாமையாளர் ஜெப்ரி ஜெபதர்ஷன் பரிந்துரைக்கப்பட்டிருந்தார்.

2020ஆம் ஆண்டுக்கான தொலைக்காட்சி அரச விருது வழங்கல் விழாவில் சிறந்த கலாசார நிகழ்ச்சிக்கான விருது மற்றும் சிறந்த புலனாய்வு அறிக்கையிடலுக்கான விருதுக்கு நியூஸ்பெஸ்ட்டின் சிசிரகுமார் கிரிஷாந்த்ராஜ் பரிந்துரைக்கப்பட்டிருந்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்