பாண் விலை 10 ரூபாவால் அதிகரிப்பு

பாண் விலை 10 ரூபாவால் அதிகரிப்பு

பாண் விலை 10 ரூபாவால் அதிகரிப்பு

எழுத்தாளர் Staff Writer

28 Nov, 2021 | 3:07 pm

Colombo (News 1st) இன்று (28) நள்ளிரவு முதல் ஒரு இறாத்தல் பாணின் விலை 10 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதனிடையே நாளைய தினம் (29) முதல் ரோல்ஸ், மரக்கறி ரொட்டி, முட்டை ரொட்டி, பராட்டா உள்ளிட்ட சிற்றுண்டிகளின் விலை 5 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அத்துடன், கொத்து ரொட்டியின் விலை 10 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்