எல்ல - பசறை வீதியின் 16 ஆம் கட்டைக்கு அருகில் மண்சரிவு
by Staff Writer 28-11-2021 | 5:09 PM
Colombo (News 1st) நிலவும் கடும் மழையுடனான வானிலை காரணமாக, எல்ல - பசறை வீதியின் 16 ஆம் கட்டைக்கு அருகில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
கல் மற்றும் மண்மேடு சரிந்து வீழ்ந்தமையால் குறித்த வீதி மூடப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.