by Staff Writer 27-11-2021 | 5:02 PM
Colombo (News 1st) மாத்தளை - உக்குவளை அரச வங்கி கிளையொன்றில் கடமையில் இருந்த காவலாளி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
51 வயதானவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலம் மேலதிக மருத்துவ பரிசோதனைக்காக மாத்தளை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
உயிரிழந்தமைக்கான காரணம் இதுவரை தெரிய வராத நிலையில், மேலதிக விசாரணைகளை மாத்தளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.