கோதுமை மாவிற்கும் தட்டுப்பாடு

by Bella Dalima 27-11-2021 | 5:58 PM
Colombo (News 1st) பால்மா, எரிவாயு, மரக்கறிகளுக்கு சந்தையில் ஏற்கனவே தட்டுப்பாடு நிலவுகின்றது. இந்த பட்டியலில் தற்போது கோதுமை மாவும் இணைந்துள்ளது. நாட்டில் பல்வேறு பகுதிகளில் கோதுமை மாவிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக பேக்கரி உரிமையாளர்களும் நுகர்வோரும் கூறுகின்றனர். ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலையை 17 ரூபாவினால் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக புறக்கோட்டை மொத்த விற்பனை நிலைய வர்த்தகர்கள் கூறுகின்றனர். இதனிடையே, தமது உற்பத்திக்கான கோதுமை மாவை பெறுவதில் அசௌகரியத்தை எதிர்நோக்கியுள்ளதாக பேக்கரி உரிமையாளர்களும் உணவக உரிமையாளர்களும் கூறுகின்றனர்.