கோழி இறைச்சி, முட்டை விலை அதிகரிப்பு

கோழி இறைச்சி, முட்டை விலை அதிகரிப்பு

கோழி இறைச்சி, முட்டை விலை அதிகரிப்பு

எழுத்தாளர் Staff Writer

27 Nov, 2021 | 3:05 pm

Colombo (News 1st) சந்தைகளில் கோழி இறைச்சி மற்றும் முட்டையின் விலை அதிகரித்துள்ளது.

கொழும்பு, குருநாகல், நீர்கொழும்பு உள்ளிட்ட பகுதிகளில் இந்த நிலைமை குறித்து இன்று நியூஸ்ஃபெஸ்ட் ஆராய்ந்தது.

சில இடங்களில் முட்டையின் விலை 23 முதல் 25 ரூபா வரை காணப்படுகின்றது.

ஒரு கிலோகிராம் கோழி இறைச்சி 780 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது.

குளிரூட்டியில் வைக்கப்பட்ட ஒருகிலோகிராம் கோழி இறைச்சி சில நாட்களுக்கு முன்னர் 460 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டாலும், தற்போது அதன் விலை 590 ரூபாவாக காணப்படுகின்றது.

இதனிடையே, மழையுடனான வானிலையால் மரக்கறிகளின் விலைகள் அதிகரித்துள்ளதை அடுத்து, கோழி இறைச்சிக்கான கேள்வி அதிகரித்துள்ளதாக இலங்கை கோழி இறைச்சி விற்பனையாளர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், கோழி இறைச்சிக்கு ஏற்றுமதி சந்தை உருவாகியுள்ளதாக விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே பாராளுமன்றத்தில் நேற்று (26) தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்