கண்டி – அங்கும்புரயில் வீட்டின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் பெண் பலி

கண்டி – அங்கும்புரயில் வீட்டின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் பெண் பலி

கண்டி – அங்கும்புரயில் வீட்டின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் பெண் பலி

எழுத்தாளர் Staff Writer

27 Nov, 2021 | 2:26 pm

Colombo (News 1st) கண்டி – ரம்புக்வெல, அங்கும்புர பகுதியில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்த இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் 56 வயதான பெண் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

இதனிடையே, மொனராகலை மாவட்டத்தின் கொட்டியால ஓய பெருக்கெடுத்ததால், 10 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, இன்றும் பல பகுதிகளில் மழை பெய்வதற்கான சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

மேல், மத்திய, சப்ரகமுவ, ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று 75 மில்லிமீட்டர் வரை மழை பெய்யலாம் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்