பயணக்கட்டுப்பாடுகளை அமுல்படுத்தும் தென்னாபிரிக்கா

கடுமையான பயணக் கட்டுப்பாடுகளை அமுல்படுத்தவுள்ள தென்னாபிரிக்கா

by Bella Dalima 27-11-2021 | 10:20 PM
Colombo (News 1st) தென்னாபிரிக்க ஜனாதிபதி சிறில் ரமபோசா COVID வைரஸ் தொடர்பான தேசிய கட்டளை சபையை அவசரமாகக் கூட்டியுள்ளார். தென்னாபிரிக்கா உள்ளிட்ட சில நாடுகளில் புதிததாக பரவும், தீவிர திரிபுடைய COVID பிறழ்வு தொடர்பான கலந்துரையாடலுக்காக இந்த சபை கூட்டப்பட்டுள்ளது. அனைத்து ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளும், ஆபிரிக்க வலயத்திற்கு தடை விதித்துள்ள பின்புலத்திலேயே சிறில் ரமபோசா இந்தக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தார். தற்போதைய நிலைமையில், நாடாளாவிய ரீதியில் கடுமையான பயணக் கட்டுப்பாடுகளை அமுல்படுத்த தாம் தீர்மானித்துள்ளதாக தென்னாபிரிக்க ஜனாதிபதி இதன்போது அறிவித்துள்ளார்.