ஏறாவூரில் ஆணின் சடலம் மீட்பு

ஏறாவூரில் ஆணின் சடலம் மீட்பு

ஏறாவூரில் ஆணின் சடலம் மீட்பு

எழுத்தாளர் Staff Writer

27 Nov, 2021 | 2:58 pm

Colombo (News 1st) மட்டக்களப்பு – ஏறாவூர், தளவாய் பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

தளவாயிலுள்ள மணல் சுத்திகரிப்பு பண்ணையிலுள்ள நீர் வடிந்தோடும் இயற்கை தோணாவினுள் இருந்தே நேற்று பின்னிரவு சடலம் மீட்கப்பட்டது.

கூலித்தொழிலில் ஈடுபடும் செங்கலடி – கித்துள் பகுதியை சேர்ந்த 07 பிள்ளைகளின் தந்தை ஒருவரே தோணாவினுள் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்திசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்