பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் டிங்கர் லசந்த உயிரிழப்பு

பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் டிங்கர் லசந்த உயிரிழப்பு

எழுத்தாளர் Bella Dalima

26 Nov, 2021 | 3:19 pm

Colombo (News 1st) சன்ஷைன் சுத்தாவின் கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரான டிங்கர் லசந்த என அழைக்கப்படும் லுணுவிலகே லசந்த இன்று அதிகாலை பொலிஸாரின் துப்பாக்கி பிரயோகத்தினால் உயிரிழந்துள்ளார்.

களுத்துறையிலுள்ள வீடொன்றில் மறைந்திருந்த சந்தர்ப்பத்தில் களுத்துறை குற்றத்தடுப்பு பிரிவினரால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மறைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு துப்பாக்கிகள் மற்றும் கைக்குண்டொன்றை தேடுவதற்காக குறித்த சந்தேகநபரை அழைத்து சென்ற சந்தர்ப்பத்தில், பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது சந்தேகநபர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் 2 பொலிஸ் உத்தியோகத்தர்கள் காயமடைந்துள்ளனர்.

டிங்கர் லசந்த என அழைக்கப்படும் லுணுவிலகே லசந்த, பாதாளக்குழுவினரின் துப்பாக்கிதாரி என்பதுடன், பல்வேறு குற்றச்செயல்கள் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் எனவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்