ஐ.நா தன்னார்வ அமைப்பினால் மக்கள் சக்திக்கு விருது 

ஐ.நா தன்னார்வ அமைப்பின் விருதிற்கு 'மக்கள் சக்தி' தெரிவு

by Staff Writer 26-11-2021 | 8:34 PM
Colombo (News 1st) இலங்கையில் தன்னார்வ தொண்டினை அதிகரிப்பதற்காக வழங்கிய பங்களிப்பை கௌரவித்து ஐக்கிய நாடுகளின் தன்னார்வ அமைப்பு மக்கள் சக்திக்கு விருதொன்றை வழங்கியுள்ளது. விசேட நடுவர் குழுவினால் ஊடகப் பிரிவின் கீழ் இந்த விருதிற்காக மக்கள் சக்தி தெரிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த சில வருடங்களில் தன்னார்வ தொண்டை அதிகரிப்பதற்காக மக்கள் சக்தி வழங்கிய பங்களிப்பு கௌரவிக்கப்பட வேண்டியது எனவும், டிசம்பர் 7ஆம் திகதி ஐக்கிய நாடுகளின் தன்னார்வ தொண்டு விருது வழங்கும் விழாவில் இந்த விருது வழங்கப்படவுள்ளதாகவும் ஐக்கிய நாடுகளின் தன்னார்வ தொண்டு நிகழ்ச்சித் திட்டம் அறிக்கையொன்றின் மூலம் தெரிவித்துள்ளது. மக்கள் சக்தி வேலைத்திட்டம் நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கி முன்னெடுக்கப்படுகிறது. 2016 ஆம் ஆண்டில் சர்வதேச மனிதாபிமான சம்மேளனத்தின் போது, மக்கள் சக்திக்கு விருதொன்று கிட்டியமையும் குறிப்பிடத்தக்கது.