வேகக் கட்டுப்பாட்டை இழந்த டிப்பர் கொடிகாமம் சந்தைக் கட்டிடத்துடன் மோதி விபத்து (CCTV)

வேகக் கட்டுப்பாட்டை இழந்த டிப்பர் கொடிகாமம் சந்தைக் கட்டிடத்துடன் மோதி விபத்து (CCTV)

எழுத்தாளர் Bella Dalima

25 Nov, 2021 | 5:03 pm

Colombo (News 1st) யாழ். கொடிகாமம் சந்தியில் வேகக் கட்டுப்பாட்டை இழந்த டிப்பர் ஒன்று சந்தைக் கட்டிடத்துடன் மோதி விபத்திற்குள்ளானமை அங்கிருந்த CCTV கெமராவில் பதிவாகியுள்ளது.

இதன்போது, டிப்பர் வாகனத்தின் முன்பகுதி சேதமடைந்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் இருந்து கிளிநொச்சி நோக்கி வேகமாக பயணித்த டிப்பர் சமிக்ஞை விளக்கு அருகே நிறுத்தப்பட்டுள்ளது.

அதன் பின்னர் வேகமாக வந்த மற்றுமொரு டிப்பர் வாகனம் வேகக் கட்டுப்பாட்டை இழந்து கொடிகாமம் சந்தை கட்டிடத்துடன் மோதியுள்ளது.

விபத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லையென நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்