காட்டு யானை தாக்கி முதியவர் உயிரிழப்பு

காட்டு யானை தாக்கி முதியவர் உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

25 Nov, 2021 | 12:28 pm

Colombo (News 1st) முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு – மன்னாகண்டல் கிராமத்தில் காட்டு யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

முல்லைத்தீவு கெருடமடு மன்னாகண்டலை சேர்ந்த 65 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறினர்.

குளத்தில் மீன்பிடிக்கச் சென்று திரும்பிய போது நேற்றிரவு (24) யானை தாக்கி குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்