ஆங்கிலக் கால்வாயில் படகு கவிழ்ந்து விபத்து; 31 பேர் பலி

ஆங்கிலக் கால்வாயில் படகு கவிழ்ந்து விபத்து; 31 பேர் பலி

ஆங்கிலக் கால்வாயில் படகு கவிழ்ந்து விபத்து; 31 பேர் பலி

எழுத்தாளர் Bella Dalima

25 Nov, 2021 | 4:36 pm

Colombo (News 1st) ஐரோப்பிய நாடுகளுக்குள் சட்டவிரோதமாக நுழைவதற்காக பிரான்ஸ் – இங்கிலாந்து கடற்பரப்பில் பயணம் செய்தபோது படகு கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் பெண்கள் உட்பட 31 பேர் பலியாகியுள்ளனர்.

அட்லாண்டிக் பெருங்கடலில் பிரான்ஸ் – இங்கிலாந்து நாடுகளுக்கு இடையே உள்ள ஆங்கிலக் கால்வாய் வழியாக சென்றுகொண்டிருந்த படகு நேற்று (24) இரவு கவிழ்ந்தது.

இதில் பெண்கள், குழந்தைகள் உட்பட 31 அகதிகள் நீரில் மூழ்கி பலியாகியிருப்பதாகவும் 2 பேர் மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் காணாமற்போனவர்களை மீட்கும் நடவடிக்கையில் இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்