அரசாங்கத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை சுதந்திரக் கட்சி உறுப்பினர்களிடமே உள்ளது: மைத்திரிபால தெரிவிப்பு

எழுத்தாளர் Staff Writer

25 Nov, 2021 | 7:51 pm

Colombo (News 1st) தற்போதைய அரசாங்கத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அதிகாரம் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 14 உறுப்பினர்களது கைகளிலேயே தங்கியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்தில் இன்று (25) தெரிவித்தார்.

வரவு செலவுத் திட்ட விவாதத்தில் கலந்துகொண்டு கடந்த செவ்வாய்க்கிழமை (23) அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்த கருத்திற்கு பதிலளிக்கும் போதே முன்னாள் ஜனாதிபதி இதனைக் கூறினார்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவித்ததாவது,

எனக்கு நான்கு வாகனங்களே ஒதுக்கப்பட்டன. எனது ஆட்சிக்காலத்தின் செலவை 3.5 பில்லியனாகவும் தற்போதைய ஜனாதிபதியின் கடந்த வருட செலவை 1.5 பில்லியனாகவும் குறிப்பிட்டு, நான் அதிகளவில் செலவிட்டுள்ளதாக கூறினர். தௌிவாகக் கூற வேண்டுமானால் எனது ஆட்சியில் ஜனாதிபதி செயலகத்தில் 7 பிரதான செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. அந்த செயற்றிட்டங்களில் ஒன்று கூட இன்று முன்னெடுக்கப்படவில்லை. அந்த செயற்றிட்டங்களுக்கே செலவானது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்