58,000 பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படவுள்ளது

58,000 பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படவுள்ளது

58,000 பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படவுள்ளது

எழுத்தாளர் Staff Writer

24 Nov, 2021 | 6:07 pm

Colombo (News 1st) அரச சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்ட பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படவுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சிகள் இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்தார்.

நிரந்தர நியமனம் வழங்கப்படுவோருக்கு மாதாந்தம் 41,000 ரூபா சம்பளம் பெற்றுக்கொடுக்கப்படும் என பாராளுமன்றத்தில் இன்று (24) உரையாற்றிய போது இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க குறிப்பிட்டார்.

2015 ஆம் ஆண்டுக்கு பின்னர் சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்ட சுமார் 58,000 பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.

COVID தொற்று காரணமாக பட்டதாரிகளுக்கு வழங்கப்படவிருந்த தொழில் பயிற்சிக்கு இடையூறு ஏற்பட்டதாகவும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சிகள் இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க சுட்டிக்காட்டினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்