சிறுகோளை தாக்கி அழிக்கும் விண்கலத்தை ஏவியது நாசா

சிறுகோளை தாக்கி அழிக்கும் விண்கலத்தை ஏவியது நாசா

by Bella Dalima 24-11-2021 | 4:42 PM
Colombo (News 1st) சிறுகோளை (Asteroid) தாக்கி அழிக்கும் விண்கலத்தை நாசா ஏவியுள்ளது. சிறுகோளைத் தகர்ப்பதற்கான உலகின் முதலாவது தொழில்நுட்பமாக இது அமைந்துள்ளது. இந்த விண்கலம் சிறுகோளைத் தாக்கி அதன் வேகம் மற்றும் போக்கை மாற்றக்கூடியது. டார்ட் (DART) எனப்படும் குறித்த விண்கலம் SpaceX Falcon 9 ரொக்கட்டில் வைத்து இரவு 10.21-க்கு ( Pacific Time) கலிபோர்னியாவில் உள்ள Vandenberg விண்வௌி ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. பாரிய விண்கற்கள் ஏற்படுத்தும் அழிவிலிருந்து பூமியை பாதுகாக்க இந்த திட்டம் உதவும் என நம்பப்படுகிறது.