புதிய களனி பாலத்தின் “கல்யாணி தங்க நுழைவாயில்” திறந்து வைப்பு

புதிய களனி பாலத்தின் “கல்யாணி தங்க நுழைவாயில்” திறந்து வைப்பு

எழுத்தாளர் Staff Writer

24 Nov, 2021 | 10:19 pm

Colombo (News 1st) புதிய களனி பாலத்தின் “கல்யாணி தங்க நுழைவாயில்” ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் இன்று (24) திறந்து வைக்கப்பட்டது.

உயர் தொழில்நுட்ப கேபிள்கள் மீது இலங்கையில் அமைக்கப்பட்டுள்ள முதலாவது பாலம் இதுவாகும்.

புதிய களனி பாலத்தின் “கல்யாணி தங்க நுழைவாயில்” இன்று மாலை 6 மணிக்கு திறந்து வைக்கப்பட்டது.

ஜனாதிபதி, பிரதமர் மற்றும் இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

களனி பாலத்தின் நிர்மாணப் பணிகள் 2014 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டன.

களனி கங்கைக்கு குறுக்காக அமைக்கப்பட்டுள்ள இந்த பாலத்தின் நீளம் 380 மீற்றர் ஆகும்.

ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின் நிதி பங்களிப்புடன், சுமார் 40 பில்லியன் ரூபா செலவில் கல்யாணி தங்க நுழைவாயில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்