படகுப்பாதை அனர்த்தத்தின் பின்னரான புதிய பஸ் சேவைக்கு எதிர்ப்பு 

படகுப்பாதை அனர்த்தத்தின் பின்னரான புதிய பஸ் சேவைக்கு எதிர்ப்பு 

எழுத்தாளர் Staff Writer

24 Nov, 2021 | 10:13 am

Colombo (News 1st) கிண்ணியா – குறிஞ்சாக்கேணியில் இடம்பெற்ற படகுப்பாதை விபத்தை அடுத்து, இன்று (24) காலை முன்னெடுக்கப்படவிருந்த பஸ் சேவைக்கு மக்கள் தொடர்ந்தும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

குறிஞ்சாக்கேணியிலிருந்து கிண்ணியாவிற்கு இன்று காலை முன்னெடுக்கப்படவிருந்த இலங்கை போக்குவரத்து பஸ் சேவை, மக்களின் எதிர்ப்பினால் நிறுத்தப்பட்டுள்ளது.

குறித்த பஸ் குறிஞ்சாக்கேணி பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த போது பொது மக்களால் பஸ் மறிக்கப்பட்டுள்ளது.

இதனால் பஸ்ஸில் பயணித்த பாடசாலை மாணவர்கள் உள்ளிட்டோர் மீண்டும் வீடு திரும்பியதாக நியூஸ்பெஸ்ட் செய்தியாளர்கள் தெரிவித்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்