சுவீடனில் முதல் பெண் பிரதமர் தெரிவு

சுவீடனில் முதல் பெண் பிரதமர் தெரிவு

சுவீடனில் முதல் பெண் பிரதமர் தெரிவு

எழுத்தாளர் Bella Dalima

24 Nov, 2021 | 5:35 pm

Colombo (News 1st) சுவீடனில் முதலாவது பெண் பிரதமர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

சமூக ஜனநாயக கட்சியின் தலைவியும் தற்போதைய நிதியமைச்சருமான Magdalena Andersson சுவீடனின் முதலாவது பெண் பிரதமராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று (24) நடைபெற்ற வாக்கெடுப்பில் அவருக்கு ஆதரவாக 117 வாக்குகள் மாத்திரமே கிடைத்தன. 349 உறுப்பினர்களில் அவருக்கு எதிராக 174 பேர் வாக்களித்திருந்தனர். 57 பேர் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை.

இதனால் Magdalena Andersson வாக்கெடுப்பில் தோல்வியடைந்தார்.

இருப்பினும், அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஏனெனில், ஸ்வீடிஷ் சட்டத்தின்படி பெரும்பான்மை பாராளுமன்ற உறுப்பினர்கள் அவருக்கு எதிராக வாக்களிக்காதிருந்தால் வெற்றி பெறலாம்.

54 வயதான Magdalena Andersson சுவீடனின் சமூக ஜனநாயகக் கட்சியின் தலைவராக இந்த மாதம் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்