கிண்ணியா அனர்த்தம்: படகுப் பாதையின் உரிமையாளர் உள்ளிட்ட மூவர் கைது

கிண்ணியா அனர்த்தம்: படகுப் பாதையின் உரிமையாளர் உள்ளிட்ட மூவர் கைது

கிண்ணியா அனர்த்தம்: படகுப் பாதையின் உரிமையாளர் உள்ளிட்ட மூவர் கைது

எழுத்தாளர் Staff Writer

24 Nov, 2021 | 3:12 pm

Colombo (News 1st) திருகோணமலை – கிண்ணியா, குறிஞ்சாக்கேணியில் பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட 06 பேர் உயிரிழந்த படகுப் பாதை விபத்து தொடர்பில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் படகுப் பாதையின் உரிமையாளரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட ஏனைய சந்தேகநபர்களில் குறித்த படகுப் பாதையை செலுத்தியவரும், பயணக் கட்டணத்தை அறவிடும் நபரும் அடங்குகின்றனர்.

மூவரும் இன்று திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்