வலி. மேற்கு பிரதேச சபையின் பட்ஜெட் நிறைவேற்றம்

வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம்

by Staff Writer 23-11-2021 | 3:39 PM
Colombo (News 1st) யாழ். வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 18 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. பிரதேச சபையின் வரவு செலவுத் திட்ட கூட்டம் தவிசாளர் தர்மலிங்கம் நடனேந்திரன் தலைமையில் இன்று (23) காலை ஆரம்பமானது. இதன்போது, தவிசாளரால் வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் சபையில் சமர்ப்பிக்கப்பட்டதுடன், விவாதங்களின் பின்னர் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 9 உறுப்பினர்களும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் 4 உறுப்பினர்களும் ஐக்கிய தேசியக் கட்சியின் 3 உறுப்பினர்களும் சுயேட்சைக் குழுவின் 3 உறுப்பினர்களும் வரவு செலவுத் திட்டத்தை ஆதரித்தனர். ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு உறுப்பினர் வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களித்தார். ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் 4 உறுப்பினர்களும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஒரு உறுப்பினரும் சபைக்கு சமூகமளிக்கவில்லை. இதற்கமைய, யாழ். வலி. மேற்கு சுழிபுரம் பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 18 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.