மனித உரிமைகள் செயற்பாட்டாளர் குர்ரம் பர்வேஸ் கைது

காஷ்மீரின் பிரபல மனித உரிமைகள் செயற்பாட்டாளர் குர்ரம் பர்வேஸ் கைது

by Bella Dalima 23-11-2021 | 4:32 PM
Colombo (News 1st) காஷ்மீரின் பிரபல மனித உரிமைகள் செயற்பாட்டாளர் குர்ரம் பர்வேஸை இந்திய பயங்கரவாத தடுப்புப் பிரிவு கைது செய்துள்ளது. சாதாரணமாக பிணை பெறமுடியாத, கடுமையான, பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி வழங்கியமை, சதித்திட்டம் தீட்டியமை ஆகிய குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளன. இந்திய ஆளுகைக்கு உட்பட்ட காஷ்மீரில் உள்ள அவரது வீடு மற்றும் அலுவலகத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பைத் தொடர்ந்து, தேசிய புலனாய்வுப் பிரிவினால் குர்ரம் பர்வேஸ் கைது செய்யப்பட்டார். இவரது கைது உலகளாவிய ரீதியில் கண்டனங்களுக்கு வழிவகுத்துள்ளதுடன், அவரை விரைவில் விடுவிக்குமாறு கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன. மனித உரிமைகளை பாதுகாக்க விரும்புபவர்களை மௌனிக்க செய்வதற்கான ஒரு முயற்சியாகவே இவரது கைது அமைந்துள்ளதாக செயற்பாட்டாளர்களும் ஏனையவர்களும் சமூக வலைத்தளங்களில் சாடியுள்ளனர். பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான அரசாங்கத்தை குர்ரம் பர்வேஸ் நீண்ட காலமாக விமர்சித்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.