நினைவேந்தலுக்கு தடை கோரும் விண்ணப்பம் தள்ளுபடி

மாவீரர் தின நினைவேந்தலுக்கு தடை கோரும் விண்ணப்பம் ஊர்காவற்துறை நீதவானால் தள்ளுபடி

by Staff Writer 23-11-2021 | 5:31 PM
Colombo (News 1st) மாவீரர் தின நினைவேந்தலுக்கு தடை விதிக்குமாறு கோரி பொலிஸாரால் முன்வைக்கப்பட்ட விண்ணப்பங்களை யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றம் இன்று (23) தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் 6 தனிநபர்களுக்கு எதிராகவும் மாவீரர் தின நினைவேந்தலுக்கு தடை விதிக்குமாறும் கோரி ஊர்காவற்துறை மற்றும் நெடுந்தீவு பொலிஸாரால் விண்ணப்பிக்கப்பட்டது. ஊர்காவற்துறை பொலிஸாரால் 5 தனிநபர்களுக்கு எதிராகவும் நெடுந்தீவு பொலிஸாரால் ஒருவருக்கு எதிராகவும் தடை உத்தரவை கோரி தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பங்களை பரிசீலித்த நீதவான், இரண்டு விண்ணப்பங்களையும் தள்ளுபடி செய்துள்ளார். பிரதிவாதிகள் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி N.ஸ்ரீகாந்தா, கனகரட்ணம் சுகாஸ் உள்ளிட்ட சட்டத்தரணிகள் மன்றில் ஆஜராகி , பொலிஸாரால் கோரப்பட்டதற்கு அமைய தடை உத்தரவை பிறப்பிக்கக்கூடாதென வாதிட்டனர்.