ஒரு தொகை பணத்தை துபாய் கொண்டுசெல்ல முயன்றவர் கைது

சட்டவிரோதமாக ஒரு தொகை பணத்தை துபாய் கொண்டுசெல்ல முயன்றவர் கைது

by Staff Writer 23-11-2021 | 11:35 AM
Colombo (News 1st) சட்டவிரோதமாக ஒரு தொகை பணத்தை துபாய்க்கு கொண்டுசெல்ல முயற்சித்த ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரிடமிருந்து ஒரு கோடியே 40 இலட்சத்து 60 ஆயிரம் ரூபா பெறுமதியான உள்நாட்டு மற்றும் சர்வதேச நாணயம் காணப்பட்டதாக சுங்கப்பிரிவு தெரிவித்துள்ளது. கொழும்பை சேர்ந்த 27 வயதான வர்த்தகர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். துபாய் செல்வதற்காக வந்திருந்த குறித்த சந்தேகநபர் பயணப்பொதியில் சூட்சுமமாக வைத்து பணத்தொகையை கொண்டுசெல்ல முயற்சித்ததாக சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.