பசுமை விவசாயம் தொடர்ந்தும் அரசின் கொள்கை – ஜனாதிபதி

பசுமை விவசாயம் தொடர்ந்தும் அரசின் கொள்கை – ஜனாதிபதி

எழுத்தாளர் Staff Writer

22 Nov, 2021 | 3:03 pm

Colombo (News 1st) பசுமை விவசாயம் தொடர்ந்தும் அரசாங்கத்தின் கொள்கை எனவும் மரக்கறி, சோளம் மற்றும் தானிய வகைகள் உள்ளிட்ட செய்கைகளுக்கு தேவையான விவசாய இரசாயன உரத்தை தனியார் ஊடாக கொண்டுவருவது தொடர்பில் கவனம் செலுத்துமாறும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ அறிவுறுத்தியுள்ளார்.

உரம் மற்றும் விவசாய இரசாயனம் தொடர்பில் நாட்டில் எழுந்துள்ள நிலைமை குறித்து ஜனாதிபதி செயலகத்தில் ஏனைய தரப்பினருடன் இன்று (22) நடைபெற்ற கலந்துரையாடலின் போது ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.

இரசாயன உரம் அல்லது விவசாய இரசாயனம் என்பன ஒருபோதும் அரசாங்க மானியத் திட்டத்தின் கீழ் வழங்கப்படமாட்டாது என ஜனாதிபதி இதன்போது வலியுறுத்தியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்