இந்தியாவிற்கு விஜயம் மேற்கொள்ளவிருக்கும் நிதி அமைச்சர்

இந்தியாவிற்கு விஜயம் மேற்கொள்ளவிருக்கும் நிதி அமைச்சர்

இந்தியாவிற்கு விஜயம் மேற்கொள்ளவிருக்கும் நிதி அமைச்சர்

எழுத்தாளர் Staff Writer

22 Nov, 2021 | 2:36 pm

Colombo (News 1st) நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ எதிர்வரும் சில நாட்களில் இந்தியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக வௌிவிவகார அமைச்சர், பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டிருந்த அவர் இதனை கூறியுள்ளார்.

பல்வேறு வழிமுறைகள் ஊடாக நாட்டுக்குத் தேவையான மூலதனத்தைப் பெறுவதற்கு இந்திய அரசாங்கத்தின் தலைமைத்துவத்துடன் கலந்துரையாடல்களை நடத்துவதை இலக்காகக் கொண்டு நிதி அமைச்சரின் இந்த விஜயம் அமையவுள்ளது.

கடன் பெறுகின்றமை அரசாங்கத்தின் கொள்கை அல்லவென வெளிவிவகார அமைச்சர், பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் இதன்போது தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்