85 நிமிடங்கள் அமெரிக்க ஜனாதிபதியானார் கமலா ஹாரிஸ்

85 நிமிடங்கள் அமெரிக்க ஜனாதிபதியானார் கமலா ஹாரிஸ்

by Staff Writer 20-11-2021 | 3:04 PM
Colombo (News 1st) அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸிற்கு தற்காலிகமாக ஜனாதிபதி அதிகாரம் ஒப்படைக்கப்பட்டது. அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு வழக்கமான உடல் பரிசோதனையின் ஒரு பகுதியாக கொலோனோஸ்கோபி எனப்படும் பெருங்குடல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில் கமலா ஹாரிஸிடம் பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டன. இதற்கமைய, 57 வயதான கமலா ஹாரிஸ் 85 நிமிடங்களுக்கு அமெரிக்காவின் ஜனாதிபதியாக செயற்பட்டதாக வௌ்ளை மாளிகை தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் முதலாவது பெண், முதல் கறுப்பின மற்றும் முதலாவது தென் ஆசிய துணை ஜனாதிபதியாக கமலா தேவி ஹாரிஸ் திகழ்கின்றார். இதனிடையே, மருத்துவ பரிசோதனையின் பின்னர் ஜனாதிபதி ஜோ பைடனின் உடல்நிலை சிறப்பாக தேறியுள்ளதாக அவரது மருத்துவரால் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ஜோ பைடன் இன்று தனது 79 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகின்றமை குறிப்பிடத்தக்கது.