யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியில் வீடுகளில் நுழைந்து தாக்குதல்

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியில் வீடுகளில் நுழைந்து தாக்குதல்

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியில் வீடுகளில் நுழைந்து தாக்குதல்

எழுத்தாளர் Staff Writer

20 Nov, 2021 | 4:14 pm

Colombo (News 1st) யாழ்ப்பாணம் – உடுவில் அம்பலவாணர் வீதியிலுள்ள வீடொன்றின் மீது அடையாளந்தெரியாதோர் நடத்திய தாக்குதலில் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது.

யாழ். சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடுவில் அம்பலவாணர் வீதியிலுள்ள வீடொன்றின் மீது நேற்று (19) தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

வீட்டிற்கும் சொத்துக்களுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் கூறினார்.

இந்த சம்பவம் தொடர்பில் வீட்டின் உரிமையாளரால் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

எனினும், இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை எனவும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, கிளிநொச்சி – பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிளாலி, எழுதுமட்டுவாள் பகுதியில் வீடொன்றின் மீது அடையாளம் தெரியாத நபர்களால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நேற்றிரவு வீட்டிற்குள் நுழைந்த அடையாளம் தெரியாத நபர்கள் வீட்டிற்கும் வீட்டிலுள்ள சொத்துக்களுக்கும் சேதம் ஏற்படுத்தியுள்ளதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்.

இந்த சம்பவம் தொடர்பில் வீட்டின் உரிமையாளரால் பளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

எனினும், இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்