by Staff Writer 20-11-2021 | 2:49 PM
Colombo (News 1st) மேலும் 22 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன.
நவம்பர் 19 ஆம் திகதி இந்த அனைத்து மரணங்களும் பதிவாகியுள்ளமை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
உயிரிழந்தவர்களில் 13ஆண்களும் 9 பெண்களும் அடங்குகின்றனர்.
அதற்கமைய, நாட்டில் இதுவரை கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14,108 ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 5, 26,353 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, நாட்டில் இதுவரை 5, 55, 204 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.